உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  கணித ஆசிரியர்களுக்கு திருநெல்வேலியில் பயிற்சி டிச.1 முதல் டிச.5 வரை நடக்கிறது

 கணித ஆசிரியர்களுக்கு திருநெல்வேலியில் பயிற்சி டிச.1 முதல் டிச.5 வரை நடக்கிறது

தேனி: திருநெல்வேலியில் டிச., 1 முதல் டிச.,5 வரை நடக்கும் கணித பாட பயிற்சியில் பங்கேற்க தேனியில் இருந்து 55 கணித ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசு, உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் கணித பாடப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மண்டல வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. திருநெல்வேலியில் டிச.,1 முதல் டிச., 5 வரை தனியார் ஓட்டலில் நடைபெறும் பயிற்சி வகுப்பில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 55 கணித ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். பங்கேற்க உள்ள ஆசிரியர்கள் நவ.,30 மாலை பயிற்சி நடைபெறும் இடத்திற்கு 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான கணித பாட புத்தகங்கள் கொண்டு வர வேண்டும். வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வான ஆசிரியர் விபரங்கள் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் சி.இ.ஓ.,விற்கு அனுப்பப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி