உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பிளஸ் 2 மாணவியிடம் தகராறு போக்சோவில் இருவர் கைது

பிளஸ் 2 மாணவியிடம் தகராறு போக்சோவில் இருவர் கைது

கடமலைக்குண்டு: வருஷநாடு 17 வயது சிறுமி, பெற்றோருடன் வசிக்கிறார். அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். இவர், தற்போது பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து, 2 நாட்களுக்கு முன் தங்கள் தோட்டத்திற்கு சென்றார். திரும்பி வரும்போது வாலிப்பாறை ரோட்டில் டூவீலரில் சென்ற இருவர் சிறுமியின் துப்பட்டாவை பிடித்து இழுத்து, தகாத வார்த்தைகளால் பேசினர். அப்பகுதியில் இருந்தவர்கள் அருகில் வந்தவுடன் இருவரும் தங்கள் வாகனத்தில் தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து பெற்றோரிடம் சிறுமி கூறினார். சிறுமி புகாரில் வருஷநாடு போலீசார் வைகை நகர் பாண்டிசெல்வம் 23, தெய்வேந்திரன் 21, உள்ளிட்ட இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை