உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  சண்டை சேவல்களை திருடிய இருவர் கைது

 சண்டை சேவல்களை திருடிய இருவர் கைது

சின்னமனூர், சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூர் மாரியம்மன் கோயில் தெரு பெருமாள் 39, கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். விலை உயர்ந்த சண்டை சேவல்களும் வளர்த்து வருகிறார். தனது பண்ணையில் உள்ள நாட்டுக் கோழிகள், சண்டை சேவல்களுக்கு நேற்று முன்தினம் இரவு தீவனம் வைத்து விட்டு சென்றார். மறுநாள் காலையில் பார்த்த போது விலை உயர்ந்த இரண்டு சண்டை சேவல்களை காணவில்லை. அவற்றை தேடி சென்ற போது, சின்ன ஒவுலாபுரம் பெட்ரோல் பல்க் அருகில் இரண்டு பேர் தன்னுடைய சேவல்களை வைத்துள்ளதை பார்த்து பிடித்து விசாரித்தார். அவர்கள் ஓடமுயன்ற போது, அவசர போலீஸ் 100 எண்ணிற்கு தகவல் கூறினார். சின்னமனூர் போலீசார் சென்று சேவல்களை திருடிய இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் எம்.பெருமாள் பட்டியை சேர்ந்த சிவா 27, கன்னிசேர்வை பட்டியை சேர்ந்த செல்லப் பாண்டி 30 என்பது தெரிந்தது. இருவரும் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி