தடுப்பு சுவரில் டூவீலர் மோதி இருவர் காயம்
பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை தெற்கு புதுத்தெருவைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது 22. இவரது நண்பர் நந்தக்குமார் 22. இருவரும் டூவீலரில் தேனிக்கு சென்று விட்டு பெரியகுளம் வந்தனர். டூவீலரை நந்தக்குமார் ஓட்டினார். வடுகப ட்டி பிரிவு பைபாஸ் ரோடு தடுப்பு சுவரில் டூவீலர் மோதியது. இருவரும் காயமடைந்தனர். மதுரை அரசு மருத்துவமனைக்கு சாகுல்ஹமீது, தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நந்தக்குமார் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.