மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி டீ கடை ஊழியர் பலி
08-Apr-2025
டீ மாஸ்டருக்கு கத்திக்குத்து
15-Apr-2025
உத்தமபாளையம்,:நடைபாதை தகராறில் இருவர் கொலை செய்யப்பட்டனர். இதில், ராணுவ வீரர், அவரது தாயை போலீசார் கைது செய்தனர்.தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டி, மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தர். இவரது மனைவி சுதா, 52. இவர்கள், வீட்டருகே வசிக்கும் ராஜேந்திரன் குடும்பத்தினருக்கும், இவர்களுக்கும் நீண்ட காலமாக பாதை பிரச்னை இருந்துள்ளது. சுந்தரை பார்க்க மாமனார் முத்து மாயன், நேற்று முன்தினம் காமயகவுண்டன்பட்டியில் இருந்து அனுமந்தன்பட்டி வந்தார்.ராணுவத்தில், ஜம்மு - காஷ்மீரில் ஹவில்தாராக உள்ள ராஜேந்திரன் மகன் பார்த்திபன், 32, விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். பாதை பிரச்னை காரணமாக பார்த்திபன் நேற்று முன்தினம் இரவு சுந்தர் வீட்டின் முன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.பார்த்திபன் கட்டையால் தாக்கி, அரிவாளால் வெட்டியதில் முத்துமாயன் அதே இடத்தில் பலியானார். பலத்த காயமடைந்த சுந்தர், தேனி மருத்துவமனையில் இறந்தார். பலத்த காயத்துடன் சுதா சிகிச்சை பெற்று வருகிறார்.ராஜேந்திரன் டயாலிசிஸ் சிகிச்சை பெறுவதால் கைது செய்யப்படவில்லை. பார்த்திபன், விஜயாவை உத்தமபாளையம் போலீசார் கைது செய்தனர்.
08-Apr-2025
15-Apr-2025