உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இரு தரப்பு தகராறு: போலீஸ் குவிப்பு

இரு தரப்பு தகராறு: போலீஸ் குவிப்பு

கடமலைக்குண்டு: கண்டமனூர் அருகே ஜி.உசிலம்பட்டியில் திருமலை நாயக்கர் பிறந்தநாள் விழாவில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே தகராறு ஏற்பட்டதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.திருமலை நாயக்கர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஜி.உசிலம்பட்டியில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் புதிதாக பெயர் பலகை வைத்துள்ளனர். இதற்கு மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து பெயர் பலகையை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை தடுத்துள்ளனர். இதை மீறி வைக்கப்பட்ட பெயர் பலகை உடைத்து சேதப்படுத்தி விட்டனர். இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்டது. ஆண்டிபட்டி டி.எஸ்.பி., ராமலிங்கம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். புதிதாக பெயர் பலகை வைத்த சமூகத்தினர் கிராமத்தில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி வீட்டை பூட்டிவிட்டு ஒதுக்குப்புறமான பகுதிக்கு சென்று விட்டனர். ஆண்டிப்பட்டி தாசில்தார் காதர் ஷெரீப் மற்றும் போலீசார் இரு தரப்பினரிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ