உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வெள்ளத்தடுப்பு சுவர் கட்டுவதில் இரு தரப்பு மோதல் போலீசார் முன்னிலையில் அடிதடி

வெள்ளத்தடுப்பு சுவர் கட்டுவதில் இரு தரப்பு மோதல் போலீசார் முன்னிலையில் அடிதடி

தேவதானப்பட்டி:தேனி மாவட்டம், மேல்மங்கலம் பட்டாளம்மன் முத்தையா கோயில் அருகே எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் வெள்ளத்தடுப்பு சுவர் கட்டுவதில் இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் ஒருவருக்கு மண்டை உடைந்தது.பெரியகுளம் ஒன்றியம், மேல்மங்கலம் ஊராட்சியில் பட்டாளம்மன் முத்தையா கோயில் உள்ளது. இதனருகே வராகநதியில் வெள்ளத்தடுப்புச்சுவர் கட்டுமானப் பணி, தேனி எம்.பி., ரவீந்திரநாத் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் கடந்த மாதம் துவங்கியது. முத்தையா கோயில் கிழக்கு புறம் 60 மீட்டர் தடுப்பு சுவர் கட்டப்பட்டது. மேற்குபுறம் 30 மீட்டர் கட்டுவதற்கு, மேல்மங்கலம் அம்மாபட்டி தெருவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கோயிலுக்கு கரகம் எடுக்க ஆற்றில் இறங்க வேண்டும், எனவே தடுப்புச்சுவரில் இடைவெளி விட்டு கட்டவேண்டும் என தெரிவித்தனர்.இடைவெளி விட்டால், வெள்ள காலங்களில் கோயில் சுவர் பாதிப்படையும், கோயில் பாதுகாப்பு கருதி இடைவெளியின்றி கட்டவேண்டும் என கீழத்தெருவைச் சேர்ந்தவர்கள் கூறினர். இதனால் கட்டுமானப் பணி நின்றது.நேற்று ரவீந்திரநாத் எம்.பி., பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சவுந்தரம் ஆகியோர் மேல்மங்கலம் வந்தனர். இரு தரப்பினரும் பிடிவாதமாக இருந்தனர். இரு தரப்பினரும் போலீசார் முன்னிலையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.இதில் அம்மாபட்டி தெருவைச் சேர்ந்த கட்டத்தேவன் 62. தலையில் காயம் ஏற்பட்டது. ரவீந்திரநாத் எம்.பி., ஊராட்சி தலைவர் நாகராஜ் பொதுமக்களிடம் கூறுகையில், 'இரு தரப்பினரும் பேசி ஒன்றாக வாருங்கள். மீதமுள்ள பணியை துவக்கலாம்' என கூறி சென்றனர். தாக்குதல் குறித்து தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை