மேலும் செய்திகள்
வாலிபர் குத்திக்கொலை; இருவருக்கு போலீஸ் வலை
10 hour(s) ago
வைகை அணையில் இருந்து சிவகங்கை பாசனத்திற்கு நீர் திறப்பு
10 hour(s) ago
பாரதமாதா தேர் பவனி
14 hour(s) ago
உறைபனியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்
14 hour(s) ago
கம்பம் : கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகளில் குடிநீர் வினியோகம் செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். இதனால் ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் குடிநீர் தேவையை முல்லைப்பெரியாறு அணை நிறைவேற்றுகிறது. தற்போது மதுரைக்கும் குடிநீர் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து நேரடியாக கொண்டு செல்லும் திட்டப் பணிகள் நிறைவு பெற்று சோதனை ஒட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எந்த ஆண்டும் இல்லாத நிலையில் வெயில் உச்சபட்சமாக உள்ளது. இதனால் குடிநீரின் தேவை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. ஆனால் தற்போதுள்ள சூழலில் முல்லைப் பெரியாற்றிலிருந்து பம்பிங் செய்வதில் சிக்கல் எழுந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 115.35 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 209 கன அடி வரத்து உள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 105 கன அடி விடுவிக்கப்படுகிறது. இதில் மதுரை குடிநீர்திட்ட சோதனை ஒட்டத்திற்கென 25 கன அடி வரை எடுத்துக் கொள்ளப்படுகிறது. மீதமுள்ள 80 கன அடி மட்டுமே கம்பம் பள்ளத்தாக்கின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.கூடலூர், கம்பம், சின்னமனூர் நகராட்சிகள், காமயகவுண்டன்பட்டி, புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், ஓடைப்பட்டி, மார்க்கையன்கோட்டை , குச்சனூர் பேரூராட்சிகள், 32 ஊராட்சிகளுக்கு குடிநீர் இந்த 80 கன அடி நீர் பூர்த்தி செய்ய வேண்டும். நீர் திருட்டு, ஆவியாதலால் பாதிப்பு லோயர்கேம்ப், உத்தமபாளையம், காமயகவுண்டன்பட்டி, புதுப்பட்டி, சின்னமனூர், சீலையம்பட்டி, எல்லப்பட்டி ஆகிய இடங்களில் பம்பிங் ஸ்டேசன்கள் உள்ளன. லோயர்கேம்பில் கம்பம் நகர் குடிநீர் திட்ட பம்பிங் ஸ்டேஷனில் 150 குதிரை திறன் கொண்ட மோட்டார் 24 மணி நேரமும் பம்பிங் செய்கிறது. இரண்டு 75 குதிரை திறன் கொண்ட மோட்டார்களும் பம்பிங் பணியில் உள்ளது. லோயர் கேம்பில் உள்ள கம்பம் மற்றும் இதர ஊர்களுக்கான பம்பிங்கிற்கே தற்போது வெளியேற்றப்படும் தண்ணீர் போதிய அளவில் இல்லை. மேலும் லோயர்கேம்பிலிருந்து சின்னமனூர் வரை வரும் தண்ணீர் வழியிலே திருட்டு, ஆவியாவது போன்றவற்றால் வெகுவாக குறைந்து விடும். இதில் ஊராட்சிகளுக்கென பம்பிங் செய்வதில் பெரிய அளவில் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. இன்னமும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் சூழல் உள்ளதால் கம்பம் பள்ளத்தாக்கில் குடிநீர் தட்டுப்பட்டு ஏற்படுவதை தவிர்க்க வேண்டியது அவசியம். தற்போது வெளியேற்றும் நீரின் அளவை 200 கன அடியாக அதிகரிக்க வேண்டும் என்று உள்ளாட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
10 hour(s) ago
10 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago