உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மூணாறு நெரிசலுக்கு தீர்வு காண வலியுறுத்தல் சிகிச்சைக்கு செல்ல முடியாமல் பலியான சோகம்

 மூணாறு நெரிசலுக்கு தீர்வு காண வலியுறுத்தல் சிகிச்சைக்கு செல்ல முடியாமல் பலியான சோகம்

மூணாறு: மூணாறில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் இ-பாஸ் உள்பட மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். மூணாறில் வார விடுமுறை, பண்டிகை, சுற்றுலா சீசன் நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டு வருகிறது. அதற்கு தீர்வு காண மாற்று ஏற்பாடு குறித்து அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. அதனால் நெரிசல் தொடரும் நிலையில் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி கடந்த ஒரு வாரமாக நிலவும் போக்குவரத்து நெரிசலால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. மூணாறு அருகே வட்டவடை, கோவிலூரைச் சேர்ந்த மாரிசாமி 35, க்கு நேற்று முன்தினம் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரை மூணாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஜீப்பில் கொண்டு வரும் வழியில் போக்கு வரத்து நெரிசலில் சிக்கி இறந்தார். போக்குவரத்து நெரிசல் குறித்து பொது மக்களின் கருத்து: விற்பனையும் பாதிப்பு ராஜா,பேக்கரி உரிமை யாளர், மூணாறு: நகரில் வாகனங்கள் நிறுத்தவும், நெரிசலை கட்டுப்படுத்தவும் எவ்வித வசதியும் இல்லை. அதனால் சுற்றுலா பயணிகள் மட்டும் இன்றி பொது மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். நெரிசல் அதிகரிக்கும் போது வாகனங்களை நிறுத்த இயலாது என்பதால் கடைகளில் விற்பனையும் நடப்பது இல்லை. நெரிசலை கட்டுப்படுத்த மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இ.பாஸ் நடைமுறைப்படுத்துங்கள் இசக்கி,ஆட்டோ டிரைவர், மூணாறு: போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் போது ஆட்டோ ஓட்ட இயலாது. அதனால் எங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் இ-பாஸ் முறையை நடைமுறைபடுத்த வேண்டும்.அதேபோல் வாகனங்கள் நிறுத்த இடவசதி செய்து கொடுக்க வேண்டும். வழியோர கடைகள் ஒழுங்குபடுத்த வேண்டும் ரோயி, நகை கடை உரிமையாளர், மூணாறு: நான் அடிமாலி அருகே அம்பலச்சாலில் வசிக்கிறேன். அங்கிருந்து சாதாரண நாட்களில் 45 நிமிடத்தில் மூணாறுக்கு வரலாம். ஆனால் கடந்த ஒரு வாரமாக போக்குவரத்து நெரிசலால் மதியம் 12:00 மணிக்கு தான் மூணாறுக்கு வந்து சேர முடிந்தது. நகரில் பெரியவாரை ஜீப் ஸ்டாண்ட் முதல் டி.எஸ்.பி. குடியிருப்பு வரை ஆற்றோரம் இடவசதி உள்ளது. அதனை வாகனங்கள் நிறுத்துவதற்கும், வழியோர கடைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் பயன்படுத்தினால் நெரிசலை தவிர்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி