உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பாலிதீன் பயன்பாடு தாராளம்

பாலிதீன் பயன்பாடு தாராளம்

போடி:போடி காமராஜ் பஜார், தினசரி மார்க்கெட், பெரியாண்டவர் ஹைரோடு பகுதியில் நகராட்சி சுகாதார அலுவலர், ஆய்வாளர்கள் ஓராண்டு முன்பு சோதனை செய்தனர். கோடவுனில் பதுக்கிய பிளாஸ்டிக், பாலிதீன் பைகள், காலாவதியான தேதி இன்றி விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த உணவு பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். ஆனால் அதிகாரிகள் சோதனை நடத்திய மறு நாளில் இருந்து தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகளில் உணவு பொருட்கள் வைத்து விற்பனை செய்வது தாராளமாக நடந்து வருகிறது. இதனால் மக்கள் பாதிக்கும் நிலை உள்ளது. இதனை தடுக்க நகராட்சி சுகாதார அலுவலர், ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் தீவிரம் காட்ட முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !