உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குன்னுார் வரை விரிந்துள்ள வைகை அணை நீர்த்தேக்கம்

குன்னுார் வரை விரிந்துள்ள வைகை அணை நீர்த்தேக்கம்

ஆண்டிபட்டி: வைகை அணை நிரம்பியதால் அணையின் நீர்த்தேக்கப்பரப்பு குன்னூர் வரை பரந்து விரிந்துள்ளது. பெரியாறு, தேனி முல்லை ஆறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் வரும் நீர் தேனி அருகே குன்னூர் பாலம் வழியாக வைகை அணைக்கு செல்கிறது. தேனி மாவட்டத்தில் அடுத்தடுத்து பெய்த மழையால் வைகை அணை நீர்மட்டம் நேற்று அதிகாலை 4.45 மணிக்கு முழு அளவான 71 அடியாக உயர்ந்து அணை நிரம்பி உள்ளது. வைகை அணை நீர்மட்டம் முழு அளவாகும் போது அணையின் நீர்த்தேக்க பரப்பு 10 சதுர மைல் பரப்பில் பரந்து விரிந்திருக்கும். தற்போது நீர்ப்தேக்கப் பரப்பு குன்னூர் வரை விரிந்துள்ளதால் வைகை ஆறும் ஓட்டமின்றி நீர் தேக்கம் போல காட்சி அளிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ