உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சோதனை அரசியல் கட்சியினருடன் ஆலோசனை

 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சோதனை அரசியல் கட்சியினருடன் ஆலோசனை

தேனி: ''ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சோதனை டிச.11ல் துவங்க உள்ளது. இதுகுறித்து அரசியல் கட்சியினருடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். தமிழகத்தில் 2026ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது. டிச.11ல் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் முடிவடைகின்றன. அன்றைய தினம் மாவட்டங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் முதற்கட்ட சோதனை துவங்குகிறது. இதில் பெல் நிறுவன பொறியாளர்கள் ஈடுபட உள்ளனர். இயந்திரங்கள் சோதனை தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்த, அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ