உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வைகை அணை இன்று நிரம்பும்

வைகை அணை இன்று நிரம்பும்

ஆண்டிபட்டி:வைகை அணை நீர்மட்டம் இரு மாதங்களுக்கு பின் 2ம் முறையாக 70 அடியை கடந்துள்ளது. இன்று முழு அளவான 71 அடியாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.வைகை அணைக்கு பெரியாறு, தேனி முல்லை ஆறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் நீர்வரத்து கிடைக்கிறது. தேனி மாவட்டத்தில் பெய்த மழையால் அணை நீர்மட்டம் நவ., 9ல் அதிகபட்சமாக 70.51 அடியாக உயர்ந்தது. பாதுகாப்பு கருதி அணைக்கு உபரியாக வந்த நீர் ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டது. நவ., 10 முதல் மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கும், நவ.23 முதல் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனத்திற்கும் நீர் திறந்து விடப்பட்டதால் டிச.,8ல் அணை நீர்மட்டம் 62.86 அடி வரை குறைந்தது.நீர்பிடிப்பு பகுதிகளில் மழையால் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து நேற்று மாலை 4:00 மணிக்கு 70.67 அடியானது. நேற்று அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 3575 கன அடியாகவும், மதுரை, திண்டுக்கல் பாசனத்திற்கு கால்வாய் வழியாக வினாடிக்கு 1330 கன அடி, 58ம் கால்வாய் வழியாக வினாடிக்கு 100 கன அடி, மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. நீர்பாசன துறையினர் கூறியதாவது: இன்று முழு அளவான 71 அடியாக நிரம்பும் வாய்ப்புள்ளது. 71 அடியானதும் அணைக்கு உபரியாக வரும் நீர் ஆற்றின் வழியாக திறக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி