உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குமுளி மலைப்பாதையில் கழிவுகளை வீசுபவர்களுக்கு எச்சரிக்கை! வாகனங்களில் செல்வோரிடம் வனத்துறை விழிப்புணர்வு

குமுளி மலைப்பாதையில் கழிவுகளை வீசுபவர்களுக்கு எச்சரிக்கை! வாகனங்களில் செல்வோரிடம் வனத்துறை விழிப்புணர்வு

தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய வழித்தடமாக குமுளி மலைப்பாதை உள்ளது . லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கி.மீ., தூர மலைப்பாதை அடர்ந்த வனப் பகுதிக்குள் உள்ளது. இப்பகுதியில் மான், காட்டுப்பன்றி, குரங்குகள் அதிகம்.கேரளாவில் தேக்கடி, தமிழகத்தில் சுருளி அருவி, வைகை அணை உள்ளதால் இரு மாநிலங்களில் இருந்தும் குமுளி மலைப்பாதை வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் அதிகம். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் குமுளி மலைப் பாதையில் தாங்கள் கொண்டுவரும் மீதமுள்ள உணவுகளை பாலிதீன் பைகளில் வைத்து வீசிச் செல்கின்றனர். இதை உணவாக உட்கொள்ளும் வனவிலங்குகள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. மேலும் கேரளா குமுளியைச்சுற்றி வசிப்பவர்கள் தமிழக வனப்பகுதியில் வந்து கழிவுகளை கொட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மருத்துவக் கழிவுகளும் அதிகமாக கொட்டப்படுகிறது. இதனால் மலைப்பாதையில் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. இரவில் மலைப் பாதையில் இது போன்ற சம்பவங்களை கண்டுபிடிப்பதில் வனத்துறையினருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும் குமுளி மலைப்பாதையில் கழிவுகளை கொட்டுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

விழிப்புணர்வு

கம்பம் மேற்கு சரக வனத்துறையினர் எல்லைப் பகுதியான குமுளியில் தமிழகப் பகுதிக்கு வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி நோட்டீஸ் கொடுத்து விழிப்புணர்வு வழங்கி வருகின்றனர். வனப்பகுதியை தூய்மையாக வைத்திருக்கவும் பாலிதீன் பிளாஷ்டிக் கழிவுகளை கொட்டக் கூடாது எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ