உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரோட்டோர கடைகளில் எடை குறைப்பு

ரோட்டோர கடைகளில் எடை குறைப்பு

தேனி: மாவட்டத்தில் ரோட்டோர கடைகளில் விற்பனை செய்யும் பொருட்கள் எடை குறைத்து விற்பனை செய்யபடுகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத்தில் பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, பஜார், மெயின் ரோடுகள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரோட்டோர கடைகள் அதிகம் உள்ளன. இங்கு பழங்கள், காய்கறிகள், ரொட்டி உள்ளிட்டவை எடை போட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பொருட்கள் வாங்கும் போது குறிப்பிட்ட எடை சரியாக காட்டுகின்றன. ஆனால், வெளியில் எடை சோதனை செய்தால் குறைவாக உள்ளன. உதாரணமாக 2கிலோ பழங்கள் வாங்கினால், வீட்டிற்கு சென்று எடை சோதனை செய்தால் 1.5 முதல் 1.7 கி.கிராம் உள்ளன. குறைந்த விலையில் கிடைக்கிறது என நம்பி பலரும் ஏமாறுகின்றனர். இவ்வாறு எடை குறைத்து ஏமாற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் ரோட்டோர கடைகளில் தராசுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை