உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பரவலாக பெய்த சாரல் மழை

பரவலாக பெய்த சாரல் மழை

தேனி: மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக வானம் மேக மூட்டத்துடனும், அதிக பனிப்பொழிவும் காணப்பட்டது.தேனி நகர் பகுதியில் நேற்று காலை 7:00 மணி முதல் 9:00 மணிவரை தொடர்ந்து மழை பெய்தது. இதனால் ரோடுகளில் வழக்கத்தை விட குறைவான வாகனங்கள் இயங்கின. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக மஞ்சளாறு பகுதியில் 8 மி.மீ., தேக்கடியில் 4.8 மி.மீ., கூடலுாரில் 3 மி.மீ., சண்முகாநதி அணையில் 3.2 மி.மீ., வீரபாண்டியில் 2.6 மி.மீ., உத்தமபாளையத்தில் 2.4 மி.மீ., வைகை அணை, போடியில் தலா 1.6 மி.மீ., பெரியகுளத்தில் 1.4 மி.மீ., மழை என மொத்தம் 28.6 மி.மீ., மழை பதிவானது.

பெரியகுளம்:

பெரியகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை 4:30 மணி முதல் சாரல் மழை பெய்தது. மாலையில் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி