உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரோட்டில் காரை கவிழ்த்த காட்டு யானை ஜெர்மனி சுற்றுலா பயணிகள் தப்பினர்

ரோட்டில் காரை கவிழ்த்த காட்டு யானை ஜெர்மனி சுற்றுலா பயணிகள் தப்பினர்

மூணாறு: மூணாறு அருகே ரோட்டில் சென்ற காரை காட்டு யானை கவிழ்த்து சேதப்படுத்திய சம்பவத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த இரண்டு தம்பதியினர் உள்பட ஐந்து பேர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.ஜெர்மனியைச் சேர்ந்த பில்லோடர் 66, அவரது மனைவி ஷெர்லி 60, ரெஹிதாமஸ் 62, அவரது மனைவி கரோலின் 58, ஆகியோர் மூணாறுக்கு காரில் சுற்றுலா வந்தனர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ரதீஷ் 45, காரை ஓட்டினார். அவர்கள் நேற்று தேக்கடிக்கு புறப்பட்டு சென்றனர்.மூணாறில் இருந்து ஐந்து கி.மீ., தொலைவில் உள்ள 'சிக்னல் பாய்ண்ட்' பகுதியில் காலை 10:45 மணிக்கு சென்றபோது 'கிராண்டீஸ்' காட்டில் இருந்து வந்த 'மக்னா' யானை காரை மறித்து முட்டி கீழே தள்ளியது. அதில் கவிழ்ந்த காரை காலால் மிதித்து, தந்தங்களால் குத்தியது.பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்டதால் யானை காட்டிற்குள் சென்றது. அந்த வழியில் வந்தவர்கள் காரில் சிக்கியவர்களை மீட்டனர். முதலுதவி சிகிச்சை அளித்து வேறு காரில் அனுப்பி வைத்தனர்.

பசு பலி

பின்னர் காட்டிற்குள் ஆக்ரோஷமாக சென்ற யானை, அங்கு மேய்ந்து கொண்டிருந்த சொக்கநாடு எஸ்டேட் கொளமங்காய் டிவிஷனை சேர்ந்த ஆறுமுகத்தின் பசுவை கொன்றது.ரதீஷ் கூறுகையில், மூணாறுக்கு நான் பல முறை சவாரி வந்துள்ளபோதும், இது போன்ற சம்பவம் நடந்தது இல்லை. எதிரே வந்த சுற்றுலா பஸ்சுக்கு வழிவிடுவதில் கவனம் செலுத்தியதால் யானையை கவனிக்கவில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை