உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கேரளாவில் வனவிலங்கு தாக்குதல் மாநில பேரிடராக அறிவிக்க முடிவு

கேரளாவில் வனவிலங்கு தாக்குதல் மாநில பேரிடராக அறிவிக்க முடிவு

மூணாறு: கேரளாவில் யானை உள்பட வனவிலங்குகளின் தாக்குதலில் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. அதனை குறித்து முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.கேரளாவில் வனவிலங்கு தாக்குதலை மாநில பேரிடராக அறிவிக்கவும், பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சேவையை பயன்படுத்தப்படும். முதல்வர், அமைச்சர்கள் அளவிலும், அதிகாரிகள் மட்டத்திலும் நான்கு குழுக்கள் மாவட்டம் மற்றும் உள்ளூர் அளவில் அமைக்கப்படும்.பிரச்னைக்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு குழுக்கள் உள்ளூர் அளவிலும் நடவடிக்கை எடுப்பார்கள். அவர்கள் மாவட்ட குழுவின் அறிவுறுத்தலின்படி செயல்பட வேண்டும். தலைமை வனவிலங்கு பாதுகாவலர் மனித, வனவிலங்கு மோதலை கையாளும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார். வனத்துறை தலைமையகத்தில் கட்டுப்பாட்டு அறை செயல்படும். வனவிலங்கு மோதலை சமாளிக்க அரசு நிறுவனமான 'ஹிப்பி' மூலம் ஏற்கனவே ரூ.100 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் மேலும் ரூ.110 கோடி ஒதுக்கப்பட்டது.மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கும் வகையில் 'வாட்ஸ் அப்' குழுக்கள் அமைக்கப்படும். கூடுதலாக தற்காலிக காவலர்கள் நியமிக்கப்படுவர். வனத்தின் அருகில் உள்ள புதர்கள் வெட்டி அகற்றப்படும். யானைகள் தடுப்பு பிரிவு குழுக்கள் கூடுதல் பணியாளர்கள், உபகரணங்கள், வாகனங்கள் ஆகியவற்றுடன் வலுப்படுத்தப்படும். வனவிலங்குகளுக்கு உணவு, தண்ணீர் ஆகியவை உறுதி செய்யப்படும் உள்பட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை