உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வன உயிரின வார விழா வாக்கத்தான் நடைபயிற்சி

வன உயிரின வார விழா வாக்கத்தான் நடைபயிற்சி

சின்னமனூர் : வன உயிரின வாரவிழாவை முன்னிட்டு புலிகளை காப்போம் என்ற கோஷத்துடன் வாக்கத்தான் நடை பயிற்சி நடந்தது.மாறிவரும் சீதோஷ்ண நிலை மாற்றத்தை தடுக்க வனங்களையும், வன உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டியது அவசியம். ஆண்டுதோறும் கொண்டாடப்படும் வன உயிரின வார விழாவின் ஒரு பகுதியாக புலிகளை காப்போம் என்ற கோஷத்துடன் ஸ்ரீவி. மேகமலை புலிகள் காப்பகம் சார்பில் விழிப்புணர்வு வாக்கத் தான் நடை பயிற்சி நேற்று காலை மேகமலை அடிவாரத்தில் நடந்தது. புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாவலர் ரவிக்குமார், உத்தமபாளையம் டி.எஸ்.பி. செங்கோட்டுவேலன், சின்னமனுார் ரேஞ்சர் சிவாஜி ஆகியோர் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட வனத்துறையினர், இயற்கை ஆர்வலர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.தென்பழநி வனத்துறை சோதனை சாவடியில் இருந்து மலை ரோட்டில் உள்ள பழைய சோதனை சாவடி வரை 4 கி.மீ. தூரத்திற்கு வாக்கத்தான் நடைபயிற்சி நடந்தது. பங்கேற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ