மேலும் செய்திகள்
வாலிபர் குத்திக்கொலை; இருவருக்கு போலீஸ் வலை
18 hour(s) ago
வைகை அணையில் இருந்து சிவகங்கை பாசனத்திற்கு நீர் திறப்பு
18 hour(s) ago
பாரதமாதா தேர் பவனி
21 hour(s) ago
உறைபனியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்
21 hour(s) ago
சின்னமனூர்: மேகமலை மணலாறு முதல் இரவங்கலாறு வரை 10 கி.மீ., தூரத்திற்கு ரோடு அமைக்கும் பணிகளில் 3 கி.மீ., பணிகள் நிறைவு பெற்ற நிலையில், மீதியுள்ள பணிகள் டிசம்பருக்குள் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டும் தற்போது வரை முடிக்கப்படாததால் பொது மக்கள் நெடுஞ்சாலைத்துறை பணிகளை துவக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் மேகமலை முக்கிய இடம் உண்டு. மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு இரவங்கலாறு, வெண்ணியாறு மகாராசா மெட்டு, தூவானம் போன்ற கண்களுக்கு விருந்தளிக்கும் பகுதிகள் ஏராளமாக உள்ளன.நீண்டகாலமாக தனியார் தேயிலை தோட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த ரோட்டை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மாநில நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தியது. சின்னமனூரில் இருந்து இரவங்கலாறு வரை உள்ள 46 கி.மீ., தூர ரோட்டை ரூ.80 கோடியில் புதுப்பிக்க மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, கடந்த 2017 ல் பணிகளை துவக்கியது. சின்னமனூரில் இருந்து மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு வரை 36 கி.மீ., தூரம் ரோடு புதுப்பிக்கப்பட்டது. மணலாறு முதல் இரவங்கலாறு வரை கடைசி 10 கி.மீ., தூரத்திற்கு ரோடு புதுப்பிக்கப்படவில்லை.கடந்த 2019ல் கொரோனோ பெருந்தொற்று ஆரம்பமானதால் பணிகள் நிறுத்தப்பட்டது. பின்னர் 2021ல் பணிகளை துவங்க ஆரம்பித்த போது, வனத்துறை அனுமதிக்கவில்லை.காரணம் 2020ல் மேகமலை புலிகள் காப்பகமாக மாறி விட்டதென்றும், டில்லியில் உள்ள தேசிய புலிகள் பாதுகாப்பு முகமையிடம் அனுமதி பெற்று பணிகளை துவங்கவும் அறிவுறுத்தப்பட்டது.அதன்பின் கடந்த 2 ஆண்டுகளாக ரோடு புதுப்பிக்கும் பணி முடங்கியுள்ளது. மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக இருந்ததால் வாகன போக்குவரத்து சிரமமாக மாறியது. கடந்த 3 மாதங்களுக்கு முன் இந்த 10 கி.மீ., ரோடு அமைக்க தேசிய புலிகள் பாதுகாப்பு முகமை அனுமதி வழங்கியது. அதன்பின் நெடுஞ்சாலைத்துறை பணிகளை துவக்கியது. தற்போது வரை 3 கி.மீ., தூரம் வரை ரோடு அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 கி.மீ., தூரத்தை வரும் டிசம்பருக்குள் முடிக்க பணிகள் முடுக்கி விட்டுள்ளதாக உத்தமபாளையம் நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. அதனால் பணிகளை விரைந்து முடிக்க பொது மக்கள், சுற்றுலாப் பயணிகள், நெடுஞ்சாலைத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago