உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முன்விரோத தகராறில் பெண் கைது

முன்விரோத தகராறில் பெண் கைது

தேனி: ஊஞ்சாம்பட்டி ஜக்கம்மன் கோயில் தெரு விஜி 27. கணவர் சாத்தாவு 34. விஜி தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கடையில் பணிபுரிகிறார். ஜூன் 10ல் பணி முடிந்து இரவு கணவருடன் அன்னஞ்சிக்கு மினிபஸ்சில் வந்தார். அப்போது சுக்குவாடன்பட்டி பெட்ரோல் பங்க் அருகே மினிபஸ் வந்த போது பஸ்சில் இருந்த ஜெயபாண்டியம்மாள் முன்விரோதம் காரணமாக தகராறு செய்தார். பின் மினிபஸ்சில் ஏறிய ராஜா மற்றும் இருவர்இணைந்து விஜி, அவரது கணவரை தாக்கினர். பாதிக்கப்பட்ட விஜி புகாரில் அல்லிநகரம் போலீசார் ஜெயபாண்டியம்மாளை கைது செய்து, தலைமறைவாக உள்ள ராஜா மற்றும் சிலரை தேடி வருகின்றனர். ஜெயபாண்டியம்மாள் புகாரில் சுக்குவாடன்பட்டி பிள்ளையார் கோயில் தெரு சரத்குமார், கோடாங்கிபட்டி உதயக்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை