உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குழந்தைகளுடன் பெண் மாயம்

குழந்தைகளுடன் பெண் மாயம்

கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு அருகே ஆலந்தளிரை சேர்ந்தவர் அழகு ராணி 42, தற்போது திருமங்கலத்தில் வசிக்கிறார். இவரது இரு மகள்களில் மூத்த மகள் சங்கீதாவை 24, தனது தம்பி கருப்பசாமிக்கு, 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார். இவர்களுக்கு பிரதிக்ஷா 7, ஜீவதர்ஷன் 2, என்ற இரு குழந்தைகள் உள்ளனர். ஏப்ரல் 22ல் சங்கீதா தனது குழந்தைகளுடன் திருமங்கலத்திற்கு வருவதாக தாயார் அழகுராணியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் ஊருக்கு சென்று சேரவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அழகுராணி புகாரில் கடமலைக்குண்டு போலீசார் குழந்தைகளுடன் மாயமான பெண் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ