உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  கோயிலை திறக்க வலியுறுத்தி கூடலுாரில் பெண்கள் முற்றுகை

 கோயிலை திறக்க வலியுறுத்தி கூடலுாரில் பெண்கள் முற்றுகை

கூடலுார்: கூடலுார் ராஜீவ் காந்தி நகரில் ஓம் சக்தி கோயில் பூட்டப்பட்ட கோயிலை வழிபாடு நடத்த திறந்து விட வலியுறுத்தி பெண்கள் கோயில் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு செல்லும் ஏராளமான பெண்கள் பல ஆண்டுகளாக இக்கோயிலில் மாலை அணிந்து வழிபாடு நடத்தி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக தனி நபர்கள் கோயிலை பூட்டி மற்றவர்கள் வழிபாடு நடத்த அனுமதி மறுப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கூடலுார் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் ஓம் சக்தி கோயில் வழிபாடு மன்றம் சார்பில் புகார் செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும் தொடர்ந்து வழிபாடு செய்ய அனுமதிக்காமல் பூட்டியிருப்பதால் வழிபாடு மன்றத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கோயிலுக்கு முன்பு முற்றுகையிட்டனர். அனைத்து மக்களும் வழிபாடு நடத்த கோயிலைத் திறக்க நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை