உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலர் சென்டர் மீடியனில் மோதி தொழிலாளி பலி

டூவீலர் சென்டர் மீடியனில் மோதி தொழிலாளி பலி

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே கதிரிய கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன் 39, கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன் தினம் இவர் வேலை பார்க்கும் வீட்டின் உரிமையாளர் விசேஷத்திற்கு சென்று விட்டு டூவீலரில் திரும்பினார். வேகமாக சென்றதால் கட்டுப்பாடு இழந்த டூவீலர் ஆண்டிபட்டி - தேனி மெயின் ரோட்டில் அரசு பெண்கள் ஐ.டி.ஐ., அருகில் சென்டர் மீடியனில் மோதியது.இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பலியானார்.சரவணன் மனைவி வேல்த்தாய் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி