பவர் டில்லர் மானியத்தில் பெற விண்ணப்பிக்கலாம்
தேனி: வேளாண் பொறியியல் துறை சார்பில் பவர் டில்லர், களையெடுக்க பயன்படும் பவர் வீடர் கருவிகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இதில் பவர் டில்லர் வாங்க அதிகபட்சம் ரூ.1.20 லட்சம், பவர் வீடர் வாங்க அதிகபட்சம் ரூ.63ஆயிரம் வரை மானியமாக வழங்கப்படும். இதில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் தேனியில் உள்ள வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் அலுவலகம் அல்லது தேனி, உத்தமபாளையத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களை நேரில் தொடர்பு கொள்ளாம் என வேளாண் செயற்பொறியாளர் சங்கர்ராஜ் தெரிவித்துள்ளார்.