உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலர் மீது வாகனம் மோதி வாலிபர் பலி

டூவீலர் மீது வாகனம் மோதி வாலிபர் பலி

உத்தமபாளையம்: ஆண்டிபட்டி அருகே உள்ள கதிரியகவுண்டன்பட்டி பாண்டியன் மகன் லோகேஷ் பிரபு 30, இவர் நேற்று முன்தினம் தனது டூவீலரில் கம்பத்தில் உள்ள நண்பரை பார்க்க வந்துள்ளார். நண்பரை பார்த்த பின் தனது டூவீலரில் மீண்டும் கம்பத்தில் இருந்து ஆண்டிபட்டிநோக்கி சென்றுள்ளார். உத்தமபாளையம் அருகே கோவிந்தன்பட்டி சர்ச் அருகில் சென்ற போது, எதிரில் வந்த வாகனம் டூவீலர் மீது மோதி தூக்கி வீசப்பட்டார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இறந்தவரின் சகோதரி துர்கா தேவி புகாரின் பேரில் உத்தமபாளையம் போலீசார் வாகனத்தை ஒட்டி வந்த பெரியகுளத்தை சேர்ந்த பழனிமுத்து வழக்கு பதிவு செய்து விசாரிக் கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ