மேலும் செய்திகள்
சிலிண்டர் வெடித்து பெண் பலி ரூ.24 லட்சம் வழங்க உத்தரவு
21 hour(s) ago
கூட்டணி கட்சிகள் குறித்து சர்ச்சை பேச்சு
15-Feb-2026 | 1
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி: 2 பெண்கள் கைது
14-Feb-2026
சாலைக்கு பெயர் சூட்டல்
13-Feb-2026
தென்காசி : தென்காசி பஸ்ஸ்டாண்டில் ஜோதிடரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.தென்காசி களக்கோடி தெருவை சேர்ந்தவர் செந்தில் (27). ஜோதிடர். இவர் தனது நண்பர்களுடன் குற்றாலம் செல்வதற்காக தென்காசி பஸ்ஸ்டாண்டிற்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த வாலிபர் ஒருவர் செந்திலிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த 300 ரூபாயை பறித்து சென்றார். பிடிக்க முயன்றவர்களையும் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். பணம் பறித்த நபர் தென்காசி செய்யது குருக்கள் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முகம்மது இஸ்மாயில் (28) என தெரிய வந்தது.இதுபற்றி தென்காசி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குபதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் திருப்பதி முகம்மது இஸ்மாயிலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
21 hour(s) ago
15-Feb-2026 | 1
14-Feb-2026
13-Feb-2026