மேலும் செய்திகள்
சிலிண்டர் வெடித்து பெண் பலி ரூ.23.89 லட்சம் வழங்க உத்தரவு
19-Feb-2026 | 2
கூட்டணி கட்சிகள் குறித்து சர்ச்சை பேச்சு
15-Feb-2026 | 1
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி: 2 பெண்கள் கைது
14-Feb-2026
சாலைக்கு பெயர் சூட்டல்
13-Feb-2026
திருவேங்கடம் : கீழமரத்தோணி அங்காள ஈஸ்வரி கோயிலில் நாளை (14ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது.கலிங்கப்பட்டி கிராமம் கீழமரத்தோணி அங்காள ஈஸ்வரி கோயிலில் புதிதாக நிறுவப்பட்டுள்ள பரமேஸ்வரன், மகாகணபதி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, மாடன், சுடலைமாடன், பரிவாரமூர்த்திகள் மற்றும் விமானங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நாளை (15ம் தேதி) நடக்கிறது.இன்று (14ம் தேதி) காலை மங்கள இசையுடன் யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. தொடர்ந்து விக்னேஷ்வர பூஜை, சங்கல்பம், மகாகணபதி ஹோமம், கோ பூஜை, சுதர்ஷன ஹோமம், மகாலட்சுமி பூஜை, நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.
மாலை தீர்த்தசங்கரஹணம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, எஜமான வர்ணம், ஆச்சார்யவர்ணம், சுவாமி ரக்ஷாபந்தனம், யாகசாலை பிரவேசம், யாகசாலை பூஜை, இரவில் யந்திரஸ்தாபனம், மருந்து சாத்துதல் நடக்கிறது.15ம் தேதி காலை 7.40 மணிக்கு யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை, யாத்ராதானம், கும்பம் எழுந்தருளல், 10 மணியளவில் விமான ஆதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனை தொடர்ந்து பிரதான கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், அலங்கார மகா தீபாராதனை நடக்கிறது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை ஆய்க்குடி வரதய்யன் கிராமம் சரவணசாஸ்திரி நடத்துகிறார்.விழா ஏற்பாடுகளை கோயில் அக்தார் சங்கரன்கோவில் ஆறுமுகம் முதலியார் கைங்கர்ய கர்த்தாக்கள் சங்கரன்கோவில் சுப்பிரமணியன், சங்கரபாண்டியன், ராமராஜ், சத்திரப்பட்டி பிச்சைமணி, கோயில் பூசாரி அங்கையாபிள்ளை செய்துள்ளனர்.
19-Feb-2026 | 2
15-Feb-2026 | 1
14-Feb-2026
13-Feb-2026