உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / திருமணத்தை தடுப்பவர்களை கண்டித்து இளைஞர்கள் போஸ்டர்

திருமணத்தை தடுப்பவர்களை கண்டித்து இளைஞர்கள் போஸ்டர்

திருநெல்வேலி:திருநெல்வேலி பொன்னாக்குடியில் திருமண வரன்களை தடுப்பவர்களை கண்டித்து இளைஞர்கள் விரக்தியில் போஸ்டர் ஒட்டியிருந்தனர்.திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடியில் நேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் தங்களின் திருமண வரன்களை கருத்து கூறி தடை செய்பவர்களை கண்டித்து வாசகங்கள் இருந்தன.பொன்னார்குடியில் உள்ள இளைஞர்களுக்கு திருமண வரன்கள் வரும்போது அங்குள்ள சிலர் இளைஞர்கள் குறித்து அவதுாறாக பேசி கருத்து கூறி திருமணத்தை தடுக்கின்றனர் என குற்றம் சாட்டி அந்த போஸ்டரை ஒட்டியிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Rajalakshmi
ஜூலை 13, 2024 08:46

Everything is too convoluted today. Unlike the past when parents themselves were not wayward.


Barakat Ali
ஜூலை 13, 2024 08:43

கஞ்சா குடிக்கிக்கு பொண்ணு தராத ... தந்தா பொண்ணு வாழ்க்கை நாசமாயிடும் ன்னு பொண்ணு வீட்டுல போயி எச்சரிக்கை பண்ணுறதா வெச்சுக்குவோம் .


Thirumalaimuthu L
ஜூலை 13, 2024 07:54

ஒரு பெண்ணுக்கு வரன் பார்க்கும் குடும்பத்தார் பார்க்கும் வரன் மாப்பிள்ளை நல்லவரா? குடி பழக்கம், பெண் நட்பு, குணம், குடும்ப சூழல் பற்றி அந்த ஊரில் உள்ள அவர்களுக்கு வேண்டிய நபர்களிடம் விசாரித்து தான் பெண் கொடுப்பார்கள்.. இது எப்படி தவறு ஆகும்.. பெண் கொடுக்கும் போது விசாரிப்பது தானே முறை. அப்போ இந்த இளைஞர்களின் நடவடிக்கை சரி இல்லை என்று தானே நினைக்க தோன்றும்


Balaji.k
ஜூலை 13, 2024 07:02

அந்த இளைஞர்கள் செய்த செயல் முற்றிலும் சரியே, தெருவில் புறணி பேசி பிறர் வாழ்க்கை கெடுக்கும் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள் , எமலோகம் கூடிய விரைவில் அவர்களை நிச்சயம் வரவேற்கும்.


மேலும் செய்திகள்