மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
சங்கரன்கோவில்:சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தாளாளர் டாக்டர் சுப்பாராஜ் தலைமை வகித்தார். விழாவில் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற புவனேஸ்வரி, தங்ககிரிஅரசன், பிருந்தா மற்றும் மெட்ரிக் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற முருகேஸ்வரி, பிரியங்கா, ராஜப்ரியா, சுசிலாதேவி மற்றும் 450 மார்க்கு மேல் பெற்ற மாணவ, மாணவிகள் 60 பேர்களுக்கு வாட்ச் பரிசாக வழங்கப்பட்டது.மாணவர்களின் வெற்றிக்கு உழைத்த ஆசிரியர்கள் 20 பேர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. விழாவில் ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் காசிப்பாண்டியன், ஸ்ரீவையாபுரி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வேல்முருகன், பள்ளி ஆலோசகர் புஷ்பராஜ் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.மெட்ரிக் பள்ளி துணை முதல்வர் ராஜம்மாள் நன்றி கூறினார்.
29-Sep-2025
25-Sep-2025