மேலும் செய்திகள்
சிலிண்டர் வெடித்து பெண் பலி ரூ.24 லட்சம் வழங்க உத்தரவு
8 hour(s) ago
கூட்டணி கட்சிகள் குறித்து சர்ச்சை பேச்சு
15-Feb-2026 | 1
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி: 2 பெண்கள் கைது
14-Feb-2026
சாலைக்கு பெயர் சூட்டல்
13-Feb-2026
திருநெல்வேலி:நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு செப்டம்பர் 15க்குள் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.பதிவாளர் மாணிக்கம் அறிக்கை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 19வது பட்டமளிப்பு விழா அக்டோபரில் நடக்கிறது. 2011 ஏப்ரலில் பல்வேறு பாடங்களில் முதல்நிலை பெற்றவர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் பட்டமளிப்பு விழாவில் நேரடியாக கலந்து கொள்ளலாம். மற்றவர்களுக்கு பட்டச்சான்றிதழ்கள் அஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
ஏப்ரல் 2011 தேர்வில் வெற்றி பெற்று கல்லூரி மூலம் பட்டச்சான்றிதழ்களுக்கு 300 ரூபாய் செலுத்த தவறியவர்கள், நவம்பர் 2010, அதற்கு முன் நடந்த தேர்வுகளில் வெற்றி பெற்று பட்டச்சான்றிதழ்களுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பம் பூர்த்தி செய்து கல்லூரி மூலம், தொலைநெறி தொடர்கல்வி இயக்ககம் மூலம் பல்கலைக்கழக கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கலாம்.
விண்ணப்பப்படிவத்தை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழக வளாக வரவேற் பகம், தொலைதூர தொடர் கல்வி இயக்கக அலுவலகங்கள், நாகர்கோவில் எஸ்.டி. இந்துக்கல்லூரி பல்கலைக்கழக தகவல் மையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
பட்டச்சான்றிதழுக்கான தொகையுடன் விண்ணப்பப்படிவ கட்டணமாக 25 ரூபாய் சேர்த்து 'பதிவாளர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், நெல்லை' என்ற பெயருக்கு பாங்க் டி.டி., மூலம் செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 'தேர்வாணையர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், நெல்லை - 627012' என்ற முகவரிக்கு செப்டம்பர் 15க்குள் அனுப்பப்பட வேண்டும்.இவ்வாறு பதிவாளர் மாணிக்கம் தெரிவித்தார்.
8 hour(s) ago
15-Feb-2026 | 1
14-Feb-2026
13-Feb-2026