உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ஓடும் ரயிலில் ஏற முயன்ற வியாபாரி கை துண்டித்து பலி

ஓடும் ரயிலில் ஏற முயன்ற வியாபாரி கை துண்டித்து பலி

திருநெல்வேலி:ஓடும் ரயிலில் ஏற முயற்சித்த அல்வா வியாபாரி கை துண்டித்து பலியானார்.திருநெல்வேலி அருகன்குளத்தை சேர்ந்தவர் சின்னத்துரை, 40. ரயில்வே ஸ்டேஷனில் ரயிலில் பயணியரிடம் அல்வா விற்பனை செய்து வந்தார். நேற்று மாலை நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் சென்ற ரயில் திருநெல்வேலி ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் முன்பாக அதில் ஏற முயற்சித்தார். அப்போது நிலை தடுமாறி விழுந்ததில் அவரது இடது கை துண்டிக்கப் பட்டது. கீழே விழுந்த சிறிது நேரத்தில் அவர் இறந்தார். ஜங்ஷன் ரயில்வே போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sureshkumar
ஆக 02, 2024 11:50

வியாபாரிகள் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் ஓடும் ரயிலில் ஏறுவது, இறங்குவது தவறு. ஆழ்ந்த இரங்கல்கள்.


A P
ஜூலை 31, 2024 21:48

ரயில்வே ஸ்டேஷனில் அல்வா விற்றவரின் வாழ்க்கைக்கே " இறைவன் " திருநெல்வேலியிலேயே அல்வா கொடுத்ததை நினைத்ததால் வருத்தமாக உள்ளது. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ