உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / காங்., தலைவர் ஜெயக்குமார் இறப்பு: கிணற்றில் கிடைத்த கத்தி

காங்., தலைவர் ஜெயக்குமார் இறப்பு: கிணற்றில் கிடைத்த கத்தி

திருநெல்வேலி:திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் இறந்த தோட்டத்து கிணற்றில் வீசப்பட்டிருந்த கத்தியை போலீசார் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கே.பி.கே ஜெயக்குமார் 58. மே 4ல் எரிந்த நிலையில் கரைசுத்துபுதுாரில் உள்ள அவரின் வீட்டு தோட்டத்தில் இறந்து கிடந்தார்.அவர் உடலை சுற்றி இரும்பு கம்பிகள் சுற்றப்பட்டு இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. அவரிடமிருந்து காணாமல் போன இரண்டு மொபைல் போன்கள் அவரது வீட்டு அருகில் உள்ள கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கிணற்று தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றினர். நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று பகல் வரை மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்தது. தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் கிணற்றுக்குள் கிடந்த ஒரு கத்தியை எடுத்தனர். சமையலறையில் காய்கறிகள் நறுக்க பயன்படும் கத்தி அது. ஒரு சோப்பு வைக்கும் டப்பாவும் இருந்தது. கத்தி அவர்களது வீட்டிலிருந்து வீசப்பட்டதா வேறு எப்போதோ வீசப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.நேற்று பகலில் கிணற்றில் தேடும் பணியை நிறுத்தினர். பின்னர் இரவு முதல் மீண்டும் தேடும் பணி நடந்தது. ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதால் அதற்கான ஆதாரங்களை நிறுவும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். நேற்று மதுரை மற்றும் திண்டுக்கல்லில் இருந்து தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ