| ADDED : ஜூலை 10, 2024 11:03 PM
திருநெல்வேலி,:திருநெல்வேலியில் காங்கிரசாரும் பா.ஜ.,வினரும் போட்டி போட்டு கட்சித் தலைவர்களின் உருவ பொம்மைகள் எரிப்பு போராட்டம் நடத்தினர்.தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை குறித்து பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துக்கள், மற்றும் அண்ணாமலை குறித்து செல்வபெருந்தகை பேட்டியில் தெரிவித்த கருத்துக்களுக்கு இரு கட்சியினரும் போட்டி போட்டு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று திருநெல்வேலி வண்ணார்பேட்டை காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பாக மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் அண்ணாமலையின் உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களை போலீசார் கைது செய்யவில்லை. வழக்கும் பதிவு செய்யவில்லை.எனவே மாலையில் பா.ஜ.,வினர் ஜங்ஷன் புறவழிச்சாலையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பாக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.