உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / நெல்லையப்பர் கோவிலில் கிரிக்கெட் வீரர் தரிசனம்

நெல்லையப்பர் கோவிலில் கிரிக்கெட் வீரர் தரிசனம்

திருநெல்வேலி,:நெல்லையப்பர் கோவிலில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் சுவாமி தரிசனம் செய்தார்.சர்வதேச மற்றும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் நடராஜன். இவர் ஐபிஎஸ் போட்டிகளில் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். டிஎன்பிஎல்., கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க நெல்லை சங்கர்நகர் வந்திருந்தார். சங்கர்நகரில் போட்டிகள் முடிவடைந்த நிலையில் சுவாமி தரிசனம் செய்ய நெல்லையப்பர் கோயிலுக்கு கிரிக்கெட் வீரர் நடராஜன் வந்திருந்தார். அங்கு சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதியில் நடராஜன் சுவாமி தரிசனம் செய்தார். டிஎன்பிஎல் போட்டிகளில் விளையாடி, ஐபிஎல் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு, அதன் பின் இந்திய அணியில் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ