உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / டூ-வீலர் மீது ஆட்டோ மோதி சிறுமி பலி; தந்தை காயம்

டூ-வீலர் மீது ஆட்டோ மோதி சிறுமி பலி; தந்தை காயம்

திருநெல்வேலி,:திருநெல்வேலி மாவட்டம் மானுார் அருகே தெற்கு பட்டியைச் சேர்ந்தவர் முகமது மைதீன், 33, கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, தன் 8 வயது மகள் நஸ்ரியாவுடன் டூ-வீலரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். எதிரே வந்த ஆட்டோ, டூ-வீலர் மீது மோதியதில் தந்தை, மகள் காயமுற்றனர். திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுமி இறந்தார். முகமது மைதீனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மானுார் போலீசார் விசாரிக்கின்றனர். ஆட்டோ டிரைவர் முகேஷ் குமார் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி