உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / காங்., தலைவர் உருவ பொம்மையை துாக்கில் தொங்கவிட்டவர் கைது

காங்., தலைவர் உருவ பொம்மையை துாக்கில் தொங்கவிட்டவர் கைது

விக்கிரமசிங்கபுரம்:விக்கிரமசிங்கபுரத்தில், காங்கிரஸ் தலைவர் உருவ பொம்மையை தூக்கில் தொங்கவிட்ட சம்பவத்தில் பா.ஜ., மகளிர் அணி செயலர் கணவரை போலீசார் கைது செய்தனர்.தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உருவ பொம்மையை விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள ஒரு கட்டடத்தின் அருகில் தூக்கில் தொங்கவிட்டனர். இச்சம்பவம் குறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், விக்கிரமசிங்கபுரம் நகர பா.ஜ.. மகளிர் அணி செயலர் சந்தனகுமாரியின் கணவர் பாண்டிராஜா தொப்பி ராஜா, 50 என்பவரை போலீசார் கைது செய்தனர்.இச்சம்பவத்தில் தொடர்புடைய பா.ஜ., மாவட்ட செயலர் தங்கேஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்