உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் மூடப்பட்டது தொழிலாளர்கள் கண்ணீருடன் குழு புகைப்படம்

மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் மூடப்பட்டது தொழிலாளர்கள் கண்ணீருடன் குழு புகைப்படம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு தேயிலை தோட்டங்கள் உள்ளன. இங்கு தற்போது, 520 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் 99 ஆண்டுகளுக்கு எடுத்து நடத்திய குத்தகை 2028ல் நிறைவு பெறுகிறது.இருப்பினும், தற்போது ஆலையை மூட முடிவு செய்தனர். தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டங்களை அறிவித்தனர். இதன்படி, தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.தேயிலை பறிக்கும் பணி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, நுாற்றுக்கணக்கான ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் மாஞ்சோலையில் குழுவாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி கண்ணீர் விட்டு அழுதனர். இன்று முதல் மாஞ்சோலையில் எந்த பணிகளும் நடக்காது. ஊழியர்கள் வீடுகளை காலி செய்ய 45 நாட்கள் கால அவகாசம் தரப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ