உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / குளத்தில் மூழ்கி தாய், மகள் பலி

குளத்தில் மூழ்கி தாய், மகள் பலி

திருநெல்வேலி: பாப்பாக்குடி அருகே குளத்தில் குளிக்கச்சென்ற தாய், மகள் நீரில் மூழ்கி பலியாயினர்.திருநெல்வேலிமாவட்டம் பாப்பாக்குடி அருகே கீழபாப்பாக்குடியை சேர்ந்தவர் தங்கராஜ். கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாந்தி 28. இவர்களின் மகள் இசக்கியம்மாள் 9. அங்குள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்தார். நேற்று காலை சாந்தி மகளுடன் அங்குள்ள நீர்மேலழகியான் குளத்திற்கு சென்றிருந்தார். அவர் துணிகள் துவைத்தபோது குளத்திற்குள் இறங்கிய இசக்கியம்மாள், அங்கு மண் தோண்டப்பட்டதால் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி தத்தளித்தார். அவரை காப்பாற்ற சாந்தியும் இறங்கினார். சிறிது நேரத்திலேயே தாய், மகள் நீரில் மூழ்கி பலியாயினர். பாப்பாக்குடி போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை