உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / நகராட்சி தி.மு.க., தலைவருக்கு எதிராக அக்கட்சி கவுன்சிலர்களே போர்க்கொடி

நகராட்சி தி.மு.க., தலைவருக்கு எதிராக அக்கட்சி கவுன்சிலர்களே போர்க்கொடி

திருநெல்வேலி:விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தி.மு.க.,தலைவருக்கு எதிராக அக்கட்சி உறுப்பினர்களே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கமிஷனரிடம் கடிதம் கொடுத்தனர்.தமிழகத்தில் திருநெல்வேலி மாநகராட்சி, கடையநல்லூர் நகராட்சி, சங்கரன்கோவில் நகராட்சி என பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க., மேயர், தலைவர்களுக்கு எதிராக அக்கட்சி கவுன்சிலர்களே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தலைவராக தி.மு.க.,வை சேர்ந்த செல்வ சுரேஷ் பெருமாள் உள்ளார்.மொத்தம் 21 கவுன்சிலர்கள். இரண்டு பேர் இறந்து விட்டனர். மீதமுள்ள 19 கவுன்சிலர்களில் அ.தி.மு.க.,வினர் 3 பேர். துணைத்தலைவர் மற்றும் ஒருவரை தவிர்த்து 13 தி.மு.க, கவுன்சிலர்கள், ஒரு காங்கிரஸ் கவுன்சிலர் என மொத்தம் 14 பேர் கையொப்பமிட்டு நகராட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி அதற்கான கடிதத்தை நேற்று நகராட்சி கமிஷனர் மகேஸ்வரனிடம் கொடுத்தனர். இந்நகராட்சியில் மக்கள் பிரச்னை எதுவாக இருந்தாலும் லஞ்சம் கொடுத்தால் தான் பணி நடைபெறுவதாக குற்றம் சாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை