மேலும் செய்திகள்
எஸ்.எஸ்.ஐ., விபத்தில் பலி
5 hour(s) ago
மோதலை துாண்டும் வகையில் பதிவு வாலிபருக்கு வலை
5 hour(s) ago
மோதலை துாண்டும் பதிவு வாலிபருக்கு போலீஸ் வலை
5 hour(s) ago
மின் கம்பம் முறிந்ததில் பசு, கன்று பரிதாப பலி
6 hour(s) ago
திருநெல்வேலி : திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லுாரியில் மருத்துவமனை முன், பெண் போலீசிடம் தகராறில் ஈடுபட்ட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மோகன்குமார், 40, மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மோகன்குமார் நேற்று முன்தினம் நள்ளிரவு மருத்துவமனைக்கு காரில் சென்றார். இரவு மருத்துவமனையின் இரண்டு பெரிய கேட்களில் ஒன்று பூட்டப்பட்டிருக்கும். மற்றொன்று திறந்திருக்கும். பூட்டிய கேட் முன், காரில் வந்த மோகன்குமார் இரவு காவலர்களை அவதுாறாக பேசி திறக்கும்படி கூறினார்.செக்யூரிட்டி ஆனந்தராஜ் திறந்துள்ள கேட் வழியாக வரும்படி கூறினார். அவரை டாக்டர் மோகன்குமார் தாக்கி, அவதுாறாக பேசி ரகளையில் ஈடுபட்டார்.பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசையும் அவதுாறாக பேசி ரகளையில் ஈடுபட்டார்.செக்யூரிட்டி ஆனந்தராஜ் புகாரின்படி, மோகன்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதேபோல், கடந்த மாதம், இக்கல்லுாரி ஆண்கள் விடுதியில் மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், தற்போது டாக்டர் - காவலர்கள் மோதல் நடந்துள்ளது.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
6 hour(s) ago