உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / நண்பரை கொன்று புதைத்த சிறார்கள் உட்பட 4 பேர் சிக்கினர்

நண்பரை கொன்று புதைத்த சிறார்கள் உட்பட 4 பேர் சிக்கினர்

திருநெல்வேலி:திருநெல்வேலி டவுன், செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம், 20; கட்டட தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மதியம் நண்பர்களுடன், தச்சநல்லுாரில் மது அருந்தினார். அவர் வீடு திரும்பாததால், அவரது தாய், நண்பர் சிவா, 26, என்பவரிடம் விசாரிக்க, அவர் மழுப்பினார்.இந்நிலையில், ஆறுமுகத்தை மது அருந்த அழைத்துச் சென்றவர்களே போலீசுக்கு போன் செய்து, 'குருநாதன் கோவில் பகுதியில் ஒரு கொலை நடந்துள்ளது; கண்டுபிடியுங்கள்' என, தெரிவித்துள்ளனர். போலீஸ் விசாரணையில், செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்த சிவா, 17 வயது சிறுவர்கள் இருவர், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து, ஆறுமுகத்தை கழுத்தை அறுத்து கொலை செய்து, உடலை புதைத்தது தெரிய வந்தது. ஆறுமுகம் உடலை போலீசார் மீட்டனர். சிவா உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர்.கொலையாளிகளில் ஒருவரது உறவினர் பெண்ணை ஆறுமுகம் காதலித்ததும், அதை கைவிட மறுத்ததும் இந்த கொலைக்கு காரணம் என, தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
ஏப் 10, 2025 21:01

தமிழக அரசின் மகிழ் பானம் விற்கும் துறைக்கு 17 வயது சிறுவன் முதல் எல்லாரும் கஸ்டமர்கள் , அந்த துறையை கொண்டு வந்து விதவைகளை மட்டுமா உற்பத்தி செய்கிறார்கள் முன்னாள் முதல்வரின் படைவீரர்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை