உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கடையம் அருகே குண்டுக்கல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

கடையம் அருகே குண்டுக்கல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

ஆழ்வார்குறிச்சி : கடையம் அருகே அனுமதியில்லாமல் குண்டுக்கல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. சேரன்மகாதேவி ஆர்டிஓ கருணாகரன் உத்தரவின்பேரில் அம்பாசமுத்திரம் தாசில்தார் தியாகராஜன் மேற்பார்வையில் மண்டல துணை தாசில்தார் ஜஸ்டின் ஜெயபால், கடையம் வருவாய் ஆய்வாளர் துரைராஜ், கடையம் பெரும்பத்து விஏஓ அருணாசலம், கிராம காவலர்கள் பால்ராஜ், தங்கமணி ஆகியோர் கடையம் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது தென்காசி - கடையம் மெயின்ரோட்டில் மாதாபுரம் அருகே அரியப்பபுரம் ஆறுமுகநாடார் மகன் பெரியசாமி (23) ஓட்டி வந்த டிராக்டரில் அனுமதியில்லாமல் குண்டுக்கல் ஏற்றிக் கொண்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து வருவாய்துறையினர் டிராக்டரை பறிமுதல் செய்து கடையம் போலீசில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ