மேலும் செய்திகள்
மது விற்பனை; 5 பேர் கைது
03-Oct-2024
மது பாட்டில்களை பதுக்கிய கூலி தொழிலாளி கைது
24-Sep-2024
திருநெல்வேலி : திருநெல்வேலி டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடுகின்றனர்.திருநெல்வேலி மேலப்பாளையம் அருகே குறிச்சி வாய்க்கால் பாலம் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுக்கடை செயல்படுகிறது. நேற்று அதிகாலை 3:00 மணிக்கு அங்கு புகுந்த கொள்ளையர்கள் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான 24 பெட்டி மது பாட்டில்களை கொள்ளைஅடித்தனர். லாக்கரை காஸ் வெல்டிங் மூலம் உடைக்க முயன்றனர். முடியாததால் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் தப்பியது. பின் அந்த கும்பல் சிசிடிவி கேமராவை உடைத்து ஹார்ட் டிஸ்கையும் எடுத்துச் சென்றனர். குறிச்சியில் நின்ற ஒரு ஆட்டோவை திருடி வந்து மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்ற பின் ஆட்டோவை விட்டு சென்றனர். அவர்களை போலீசார் தேடுகின்றனர்.
03-Oct-2024
24-Sep-2024