உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தாய் கொலை; மகனுக்கு வெட்டு கந்துவட்டி சகோதரர்கள் அட்டூழியம்

தாய் கொலை; மகனுக்கு வெட்டு கந்துவட்டி சகோதரர்கள் அட்டூழியம்

திருநெல்வேலி,:திருநெல்வேலி, ஜங்ஷன் சி.என்., கிராமத்தைச் சேர்ந்த சுடலைக்கண்ணு மனைவி சாவித்திரி, 60; நடைபாதையில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவரது மகன் கண்ணன், 35; மார்க்கெட்டில் சுமை துாக்கும் தொழிலாளி. சாவித்திரியின் மருத்துவ செலவிற்காக கண்ணன் அதே பகுதியைச் சேர்ந்த காளிராஜ், 35, என்பவரிடம், 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார். இதற்கு மாதம், 10,000 ரூபாய் வீதம் வட்டி செலுத்தி வந்துள்ளார். கடந்த மாதம் வட்டி செலுத்தாததால் காளிராஜ், அவரது தம்பி ஆனந்தராஜ் ஆகியோர் சாவித்திரி வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளனர். சாவித்திரி ஜங்ஷன் போலீசில் புகார் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த காளிராஜ், ஆனந்தராஜ் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சாவித்திரி மகன் கண்ணன் வேலை பார்க்கும் நயினார் குளம் மார்க்கெட்டிற்கு சென்று, அவரை தாக்கி, கத்தியால் குத்தினர். பலத்த காயமடைந்த கண்ணன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.பின்னர், சி.என்., கிராமம் வீட்டில் இருந்த சாவித்திரியை கம்பியால் அடித்துக் கொலை செய்தனர். கொலை வழக்கில் காளிராஜ், ஆனந்தராஜை போலீசார் கைது செய்தனர். கண்ணனை கத்தியால் குத்திய சம்பவத்தில் கணேசன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !