வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நடைபெறும் குற்றங்களின் தன்மைகள் அவரை அந்த முடிவுக்கு தள்ளியிருக்கும் .
திருநெல்வேலி:வழக்குகளில் தொடர்புடையவர்களின் பற்களை பிடுங்கிய போலீஸ் அதிகாரி பல்வீர்சிங் நேற்று திருநெல்வேலி கோர்ட்டில் ஆஜரானார்.திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் 2023ல் ஏ.எஸ்.பி.,யாக பணிபுரிந்த வடமாநில ஐ.பி.எஸ்., அதிகாரி பல்வீர்சிங் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கி தண்டனை கொடுத்தார். பலருக்கும் இவ்வாறு பற்கள் ப பிடுங்கப்பட்டதால் புகார் அளித்தனர். சேரன்மகாதேவி சப்-கலெக்டர் விசாரணை மேற்கொண்டார். பின்னர் பல்வீர்சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்த வழக்கில் திருநெல்வேலி முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று பல்வீர்சிங் ஆஜரானார். வழக்கில் தொடர்புடைய மற்ற போலீசாரும் ஆஜராகினர். நீதிபதி சத்யா விசாரணையை ஜூலை 3க்கு ஒத்திவைத்தார்.
நடைபெறும் குற்றங்களின் தன்மைகள் அவரை அந்த முடிவுக்கு தள்ளியிருக்கும் .