உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / சார் பதிவாளரிடம் ரூ.64 ஆயிரம் பறிமுதல்

சார் பதிவாளரிடம் ரூ.64 ஆயிரம் பறிமுதல்

திருநெல்வேலி:ராதாபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ 64 ஆயிரம் சிக்கியது. சார் பதிவாளருக்கு பணம் வாங்கிக் கொடுக்கும் இரண்டு புரோக்கர்களும் சிக்கினர்.திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை 6:00 மணியளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார், கூடுதல் எஸ்.பி. மெக்லரின் எஸ்கால், இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.சார் பதிவாளரிடம் கணக்கில் வராத பணம் ரூ. 64 ஆயிரம் சிக்கியது. சார் பதிவாளருக்கு புரோக்கராக செயல்படும் இரு நபர்களிடம் போலீசார் சோதனையிட்டனர். அவர்களது அலைபேசியிலிருந்து கூகுள் பே மூலம் சார் பதிவாளருக்கு பலமுறை ஆயிரக்கணக்கில் பணம் அனுப்பியது தெரியவந்தது.சார் பதிவாளர் முருகன், இரண்டு புரோக்கர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இரு புரோக்கர்களின் அலைபேசி கூகுள் பே கணக்கை விசாரித்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை