உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கல்லுாரி விடுதியில் மாணவன் மர்மசாவு: உறவினர்கள் போராட்டம்

கல்லுாரி விடுதியில் மாணவன் மர்மசாவு: உறவினர்கள் போராட்டம்

திருநெல்வேலி:போடி அரசு இன்ஜினியரிங் கல்லுாரி விடுதியில் மர்மமாக இறந்த நெல்லை மாணவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சொந்த ஊரில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருநெல்வேலி பர்கிட்மாநகர் அண்ணாநகரை சேர்ந்த செல்வம் மகன் விக்னேஷ் 21.தேனி மாவட்டம் போடி அரசு இன்ஜினியரிங் கல்லுாரி விடுதியில் தங்கி படித்தார்.சில தினங்களுக்கு முன் விக்னேஷ், கல்லுாரி விடுதி கழிவறையில் காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மாணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் கூறியதால் போலீசார் விசாரணை நடத்தினர்.சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அவரது உடலை வாங்க மறுத்து சொந்த ஊரில் உறவினர்கள் நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை