உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கூடுதல் விலைக்கு மது விற்பனை வி.கே.புரத்தில் "குடிமகன்கள் புலம்பல்

கூடுதல் விலைக்கு மது விற்பனை வி.கே.புரத்தில் "குடிமகன்கள் புலம்பல்

விக்கிரமசிங்கபுரம் : விக்கிரமசிங்கபுரத்தில் ஒரு சில டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக 'குடி'மகன்கள் புலம்பி வருகின்றனர்.விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒருசில கடைகளில் குவாட்டர் பாட்டில் ஒன்றுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக 5 ரூபாய் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் சில கடைகளில் விபரம் தெரியாத சிலர் 80 ரூபாய்க்கு சரக்கு வேண்டுமென கேட்கும்போது அதனைவிட விலை குறைவான சரக்குகளை கொடுத்து அதிலும் பணம் பார்க்கின்றனர்.இவ்வாறு ஒட்டுமொத்தமாக நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் ரூபாய் வரை வசூலாகிறது. டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தவறு செய்யும் டாஸ்மாக் கடைகளில் உள்ள நபர்களை மேல் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டுமென்றால் மேல் அதிகாரிகளின் போன் நம்பர்கள் அல்லது முகவரியையோ கடையின் முன் எழுதி போர்டு வைக்க வேண்டும் என்பது 'குடி'மகன்களின் கோரிக்கையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி