| ADDED : ஆக 03, 2011 12:31 AM
வள்ளியூர் : வள்ளியூரில் மருத்துவ சவரத்தொழிலாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் இன்று (3ம்தேதி) நடக்கிறது. வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கமும் முத்துவேலர் அமராவதி டிரஸ்ட் இணைந்து நடத்தும் மருத்துவ சவர தொழிலாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் இன்று(3ம்தேதி) காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை வள்ளியூர் அமராவதி ஆஸ்பத்திரியில் நடக்கிறது. முகாமில் சர்க்கரை நோய் சிறப்பு டாக்டர் சங்கரன் கலந்து கொண்டு சிகிச்சை அளிக்கிறார். முகாமில் பொதுமருத்துவம், ரத்த அழுத்த சோதனை, உணவியல் ஆலோசனை, நரம்பு பரிசோதனை, ஈ.சி.ஜி. போன்ற இலவச மருத்துவ சேவைகள் வழங்கப்படவிருக்கிறது. ஏற்பாடுகளை வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் டாக்டர் குமரமுருகன், செயலாளர் முருகன், சமூகசேவை இயக்குனர் டாக்டர் சங்கரன் மற்றும் உறுப்பினர்கள், முத்துவேலர் அமராவதி டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.